ஐபிஎல் 2022 அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.. 65 நாட்கள் கிரிக்கெட் திருவிழா.. முழு பட்டியல் இதோ

.
0


மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டபுள் ஹெடர்ஸ் என்று அழைக்கப்படும். ஒரே நாளில் 2 போட்டிகள் என 10 முறை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளன.

2 குரூப்

2 குரூப்

இம்முறை ஐபிஎல் அணிகள் விர்ச்சுவலாக 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் படி குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப் பி பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நடைமுறை

நடைமுறை

ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

அட்டவணை

அட்டவணை

ஐபிஎல் அட்டவணையில் வரும் 26ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 27ஆம் தேதி மதியம் டெல்லி, மும்பை அணிகளும், மாலை பஞ்சாப், பெங்களூரு அணிகளும் மோதுகின்றன. புதிய அணிகளான லக்னோ, குஜராத் அணிகள் 28 தேதியும், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் வரும் 29ஆம் தேதியும் மோதுகின்றன.

மைதானங்கள்

மைதானங்கள்

இதில் வான்கடேவில் 20 போட்டிகளும், பிராபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகளும், டி.ஓய். பாட்டில் மைதானத்தில் 20 போட்டிகளும், புனேவில் 15 போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 26ஆம் தேதி முதல் போட்டியில் சிஎஸ்கே, மும்பை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் ஏப்ரல் 21 மற்றும் மே 12ஆம் தேதி நடைபெறுகிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top